Map Graph

உசுமானியா மருத்துவக் கல்லூரி

உசுமானியா மருத்துவக் கல்லூரி, என்பது முன்னர் ஐதராபாத்து மருத்துவப் பள்ளி என்று அழைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1846ஆம் ஆண்டு ஐதராபாத் 5வது நிஜாம் மற்றும் பேரர், அப்சல் உத் டவ்லா, ஆசஃப் ஜா 5 ஆகியோரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி முதலில் உசுமானியா பல்கலைக்கழக இணைவினைப் பெற்றிருந்தது. இப்போது கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் இணைவுடன் உசுமானியா பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1919 -ல் உசுமானியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பிறகு, ஐதராபாத்து ஏழாவது நிஜாம் மிர் ஓசுமான் அலி கானின் நினைவாக, உசுமானியா மருத்துவக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.

Read article
படிமம்:Main_building_of_Osmania_Medical_College.jpg